காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் இல்திஜா முஃப்தி!!

  அபிநயா   | Last Modified : 28 Oct, 2019 07:51 pm
eu-delegation-should-talk-with-kashmiri-people-iltija-mufti

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு காஷ்மீர் செல்ல உள்ளதை தொடர்ந்து, அவர்களின் வருகை குறித்த தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி.

காஷ்மீரின் நிலையை அறிவதற்காக, இன்னும் சில தினங்களில் காஷ்மீர் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் டெல்லியில் சந்தித்து உரையாடினர்.

இவர்களின் வருகை குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, "சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற மத்திய அரசு, அங்கு பல கட்டுபாடுகள் விதித்துள்ளதை தொடர்ந்து, காஷ்மீர் மக்களை நேரில் சந்திக்க வரும் ஐரோப்பிய குழுவினர் மூலம் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்றதை தொடர்ந்து, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களில் இல்திஜா முஃப்தியின் தாய் மெஹபூபா முஃப்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close