ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் காஷ்மீர் சந்திப்பு இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது - அதிருப்தியில் ஜெய்ராம் ரமேஷ்!!

  அபிநயா   | Last Modified : 28 Oct, 2019 09:18 pm
allowing-eu-mps-not-indian-leaders-to-visit-j-k-insult-to-parliament-jairam-ramesh

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சில நாட்களில் காஷ்மீர் மாநில பயணம் மேற்கொள்ள உள்ளதை தொடர்ந்து, இந்திய தலைவர்கள் காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐரோப்பிய உறுப்பினர்களை அங்கு அனுமதிக்க சம்மதி தெரிவித்திருக்கும் மத்திய அரசின் முடிவு இந்திய ஜனநாயகத்தை அவமதிப்பதாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை அடுத்து, இன்று பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் சந்தித்து உரையாடிய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்னும் சில தினங்களில், காஷ்மீர் மாநில மக்களை நேரில் சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில், இந்திய தலைவர்கள் காஷ்மீர் மக்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியர்கள் அல்லாத ஐரோப்பியர்கள் காஷ்மீர் மாநில மக்களை சந்தித்து உரையாடல் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் முறையில் உள்ளதாக கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close