காஷ்மீர்: மற்றுமொரு லாரி டிரைவரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்!!

  அபிநயா   | Last Modified : 28 Oct, 2019 10:12 pm
militants-kill-another-truck-driver-in-anantnag-fourth-in-two-weeks

ஜம்மு காஷ்மீர் மாநில ஷோப்பியன் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால், டிரக் ஓட்டுனர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று அம்மாநில உதாம்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேலும் ஒரு ட்ரக் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், காஷ்மீரின் ஷோப்பியன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த இரண்டு ட்ரக் ஓட்டுனர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று அம்மாநிலத்தின் அனந்த்நாகை சேர்ந்த உதாம்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காஷ்மீரை சேர்ந்த ஆப்பிள் ட்ரக் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த இரண்டு வாரங்களில், உயிரிழந்துள்ள 6 பேரில் ஐவர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close