காஷ்மீர் மக்களுடனான ஐரோப்பிய குழு சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!!

  அபிநயா   | Last Modified : 28 Oct, 2019 10:20 pm
subramanian-swamy-slams-centre-over-eu-delegation-s-visit-to-j-k-calls-it-perversion-of-national-policy

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற பட்டதை தொடர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, காஷ்மீர் மாநில மக்களை சந்தித்து உரையாடல் மேற்கொள்ள உள்ள நிலையில், இது இந்தியாவின் தேசிய கொள்கையை பாதிக்கும் விதமாக அமையும் என்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார் பாஜக கட்சி தலைவரான சுப்பிரமணியன் சுவாமி.

காஷ்மீரின் நிலை குறித்து கலந்துரையாடும் விதமாக பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் இன்று டெல்லியில் வைத்து சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்னும் சில தினங்களில் காஷ்மீர் மக்களையும் நேரில் சந்தித்து உரையாட உள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீர் மக்களை சந்திப்பது இந்திய தேசிய கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியை ரத்து செய்ய கோரியும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜ்யசபா அமைச்சரான சுப்பிரமணியன் சுவாமி.

 

 

இதை தொடர்ந்து, காஷ்மீர் மக்களை சந்திக்க இந்திய தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐரோப்பிய உறுப்பினர்களுக்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கலாம் என்று எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close