காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் : மத்திய அரசை குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்!!

  அபிநயா   | Last Modified : 30 Oct, 2019 01:55 pm
kashmir-west-bengal-workers-died-state-government-points-out-central-government

காஷ்மீர் மாநில ஆப்பிள் பழத்தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 6 மேற்கு வங்க மாநில இளைஞர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர்களின் மரணத்திற்கு மத்திய அரசின் போதிய பாதுகாப்பின்மை தான் காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதரி

ஜம்மு காஷ்மீர் மாநில குல்காம் நகரின் ஆப்பிள் பழத்தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இளைஞர்களின் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், காஷ்மீரின் நிலை விரைவில் சீரடைய மத்திய அரசு ஓர் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி.

இவரை தொடர்ந்து, "ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதிகளால் பிற மாநில மக்களும் பாதிக்கப்படுகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மனிதநேயம் அற்ற செயல்களாக இருக்கிறது. நம்மை பாதுகாப்பதற்கு மத்திய அரசு இருக்கிறது என்று நம்பிதான் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்திருக்கும் காஷ்மீர் மாநிலத்திற்கு வேலைக்கு செல்கின்றனர் பிற மாநில மக்கள். இந்நிலையில், அவர்களின் இறப்பிற்கு மத்திய அரசின் போதிய பாதுகாப்பின்மை தான் காரணம்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார் லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌதரி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close