காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : எச்சரிக்கும் உளவுத்துறை!!

  அபிநயா   | Last Modified : 30 Oct, 2019 03:04 pm
intelligence-agencies-warn-of-possible-attack-in-kashmir-by-pakistan-backed-terror-groups

கடந்த சில நாட்களாக இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தற்போது, அவந்திபுரா, ராங்கிரத் பகுதிகளில் வரும் நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் எல்லையான ஜம்மு காஷ்மீர் பகுதியில், கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களும், அத்துமீறும் ஊடுறுவல்களும் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில அனந்த்நாக் பகுதியில் இரு தினங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வரும் நாட்களில், காஷ்மீரின் சோனாக்கர், ரைனாவாரி, சாஃபாகாடல், தர்மசாலா, அவந்திபுரா, ராங்கிரத் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனிடையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க அறிவிப்பு விடுத்த மத்திய அரசின் உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close