காஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 1 !!

  அபிநயா   | Last Modified : 30 Oct, 2019 05:19 pm
report-of-eu-delegation-in-j-k

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, காஷ்மீர் மக்களின் நிலை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதை தொடர்ந்து செய்து வந்தது பாகிஸ்தான். மேலும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக மாற்ற எண்ணிய பாகிஸ்தான், ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்திலும் இது குறித்த தனது கருத்தை முன் வைத்திருந்தது.

ஜம்மு காஷ்மீரின் விவகாரத்தை பல முறை சர்வதேச பிரச்சனையாக மாற்ற முயன்றும், உலக நாடுகளின் ஆதரவை பெற இயலாமல் தோற்றது பாகிஸ்தான். இந்நிலையில் தான் இந்திய எல்லை பகுதியான காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்க தொடங்கியது.

பயங்கரவாத தாக்குதல்களினால் அவதிக்குள்ளாகி வரும் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் கொண்ட குழு, கடந்த திங்களன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும், டெல்லியில் வைத்து நேரில் சந்தித்து, காஷ்மீரின் நிலை குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டது. அப்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மற்றும் பாதுதாப்பு ஆலோசகர் இருவரும் மிக தெளிவான முறையில் அவர்களுக்கு விளக்கினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close