காஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 2 !!

  அபிநயா   | Last Modified : 30 Oct, 2019 05:22 pm
report-of-eu-delegation-in-j-k

கடந்த திங்களன்று டெல்லியில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும், நேரில் சந்தித்து கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை சேர்ந்த 27 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, நேற்று (செவ்வாய்கிழமை), காஷ்மீர் மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக காஷ்மீர் பயணம் மேற்கொண்டிருந்தது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் நிலை குறித்து நேரில் சென்று பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய குழு, சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற உத்தரவு பிறப்பித்த இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில் ஈடுபாடில்லை என்று தெரிவித்துள்ளது.

"பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பலியாகி வரும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; அதில் தலையிடுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கம் இல்லை. பயங்கரவாதம் என்பது, தற்போது அதன் பிடியில் சிக்கி அவதிக்குள்ளாகி வரும் காஷ்மீருக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை, சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தல் தான்" என்று கூறியுள்ளார் காஷ்மீர் மக்களை மேரில் சந்தித்து உரையாடிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான ஹென்ரி மாலோஸ். 

இதை தொடர்ந்து, பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதை போல, காஷ்மீர் மக்கள், இந்திய அரசால் எந்த பாதிப்பையும் சந்திப்பதில்லை என்ற கருத்தை முன் வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close