காஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 3 !!

  அபிநயா   | Last Modified : 30 Oct, 2019 05:38 pm
report-of-eu-delegation-in-j-k

சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற உத்தரவு பிறப்பித்த இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில் ஈடுபாடில்லை என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதை போல, காஷ்மீர் மக்கள், இந்திய அரசால் எந்த பாதிப்பையும் சந்திப்பதில்லை என்றும் கூறியிருந்தனர் காஷ்மீர் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இதை தொடர்ந்து, "பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி சீரழியும் ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளையும் நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். பயங்கரவாதிகளின் முழு ஆக்கிரமிப்பில் கட்டுண்டு இருக்கும் நாடுகள் அவை. ஆனால், அந்நாடுகளை போல இவைகளுள் ஒன்றாக காஷ்மீரை நாம் கருத இயலாது. பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதை போல, காஷ்மீர் மக்கள், இந்திய அரசால் எந்த பாதிப்பையும் சந்திப்பதில்லை. ஜம்மு காஷ்மீரின் பின்தங்கிய நிலைக்கு பயங்கரவாதம் தான் காரணம்" என்று கூறியுள்ளார் ஐரோப்பிய குழுவை சேர்ந்த தைய்ரி மரியானி.

மேலும், பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட துடிக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு தங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளது காஷ்மீர் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் குழு.

காஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 1 !!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close