காஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 4 !!

  அபிநயா   | Last Modified : 30 Oct, 2019 05:26 pm
report-of-eu-delegation-in-j-k

பயங்கரவாதத்தை ஒழிக்க முயலும் இந்தியாவின் முயற்சிகளுக்கு அவர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், காஷ்மீர் மக்களின் நிலை குறித்து உலக நாடுகள் அனைத்திற்கும் தெரிவிக்கும் கடமை தங்களுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களின் இந்த நிலை மாறும் என்று கூறும் காஷ்மீர் மக்கள், இந்திய அரசை முழு மனதுடன் நம்புகின்றனர். இந்த மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, பயங்கரவாதத்தை ஒழித்து, அம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட துடிக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு தங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார் அக்குழுவின் முக்கிய உறுப்பினரான நியூட்டன் டன்.

இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் முடிவு, மனிதநேயம் அற்றது என்று சர்வதேச நாடுகள் மத்தியில் குற்றம் சாட்டிவரும் பாகிஸ்தானின் கருத்தை பொய்யாக்கி காஷ்மீர் மக்களின் நிலை குறித்து உலக நாடுகள் அனைத்திற்கும் தெரிவிக்கும் கடமை தங்களுக்கு இருப்பதாக கூறியுள்ளார் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் குழுவை சேர்ந்த ரைஸார்ட் க்சார்நெக்கி.

காஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 1 !!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close