உலகளாவிய கார் விபத்து சோதனை - 5 நட்சத்திர மதிப்பீடு பெறாத இந்திய கார்கள்!!

  அபிநயா   | Last Modified : 01 Nov, 2019 04:36 pm
global-ncap-crash-test-not-one-made-in-india-car-has-ever-scored-a-5-star-rating-in-child-occupant-protection

உலகளாவிய கார் விபத்து குறித்த சோதனையில், குழந்தைகள் பாதுகாப்பிற்கு உகந்த கார்கள் மதிப்பீட்டில், இந்தியாவின் எந்த வகை கார்களும் 5 நட்சத்திர மதிப்பீடு பெறவில்லை என்ற வருத்தமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

"இந்தியாவிற்கு உகந்த பாதுகாப்பான கார்கள்" என்ற கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் உலகளாவிய கார்கள் செயலிழப்பு சோதனையில், இந்தியாவின் மாருதி சுசுகி எர்டிகா, மாருதி சுசுகி வேகன் ஆர், ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டாட்சன் ரெயிகோ ஆகிய நான்கு கார்களும் பங்கேற்றன. 

இதில், குழந்தைகள் பாதுகாப்பிற்கான செயலிழப்பு சோதனையில், மாருதி சுசுகி எர்டிகா 3 நட்சத்திர மதிப்பீடு பெற்று முன்னிலை வகுக்கும் நிலையில், நானோ கார் மாடல் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சற்றும் தகுதியில்லை என்ற வகையில் 0 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. வயது வந்தோருக்கான பாதுகாப்பு சோதனையில் இந்த நான்கு கார்களும் 1 முதல் 3 நட்சத்திர மதிப்பீடு வரை பெற்றுள்ள போதும் முக்கிய சோதனையாக கருதப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் இந்த நான்கு கார்களில் ஒன்று கூட 5 நட்சத்திர மதிப்பீடு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தைகள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காரணியில் 5 இல்லாத போதும் 4 நட்சத்திர மதிப்பீடு பெறும் அளவில் கூட இந்தியாவின் எந்த கார்களுக்கும் தகுதி இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கும் ஒரு விஷயமாகும்.  

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close