காஷ்மீர் பிரதேச புதிய ஆளுநர் யார்??

  அபிநயா   | Last Modified : 01 Nov, 2019 05:27 pm
girish-as-kashmir-s-governor

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டு, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும்படியான மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, காஷ்மீர் பிரதேச ஆளுநராக நேற்று (அக்டோபர் 31) பதவியேற்றுள்ளார் கிரீஷ் சந்திர முர்மு.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை தொடர்ந்து, மத்திய அரசின் உத்தரவு படி ஜம்மு காஷ்மீர் மாநிலம், நேற்று முதல், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து, ஜம்முவின் ஆளுநராக சத்யபால் பால் மாலிக் உள்ள நிலையில், காஷ்மீர் பிரதேசத்தின் ஆளுநராக குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிரீஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்த போது, அவரது முதன்மை செயலாளராக முர்மு பணியாற்றியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close