யார் இந்த கிரீஷ் சந்திர முர்மு ??

  அபிநயா   | Last Modified : 01 Nov, 2019 05:27 pm
who-is-girish-chandra-murmu

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்குமாறு அறிவித்த மத்திய அரசின் உத்தரவின் படி, ஜம்மு பிரதேச ஆளுநர் சத்யபால் பால் மாலிக்கை தொடர்ந்து, காஷ்மீர் பிரதேச ஆளுநராக கிரீஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த 1959 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பிறந்த கிரீஷ் சந்திர முர்மு, ஒடிசா மாநில உத்கல் பல்கலைகழகத்தில், அரசியல் அறிவியலில் (Political Science) முதுகலை பட்டமும், இங்கிலாந்து நாட்டின் முக்கிய பல்கலைகழகங்களுள் ஒன்றான பர்மிங்காம் பல்கலைகழகத்தில் தொழில் நிர்வாக துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

இதை தொடர்ந்து, கடந்த 1985 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், குஜராத்தின் பல அரசு நிர்வாக துறைகளில் பணிவாற்றியவர். மேலும், வருவாய் துறையின் சிறப்பு செயலாளர், நிதித்துறை பிரிவின் செயலாளர் போன்ற முக்கிய பிரிவுகளின் அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருக்கும் கிரீஷ் சந்திர முர்மு, குஜராத் மாநில முதலமைச்சராக மோடி பதவி வகித்த போது, அவரது முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காஷ்மீர் பிரதேச ஆளுநராக நேற்று பதிவியேற்றிருக்கும் முர்மு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட காஷ்மீரின் முதல் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close