பிரதமர் மோடி - அதிபர் ஏஞ்சலா சந்திப்பு : பருவநிலை மாற்றத்தை குறைக்க நிதி ஒதுக்கும் இந்தியா-ஜெர்மனி!!

  அபிநயா   | Last Modified : 01 Nov, 2019 09:49 pm
india-germany-to-fight-against-climate-change

இரண்டு நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியதை தொடர்ந்து, உலகை பாதிக்கும் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான திட்டங்களை இருநாடுகளும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், இருநாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், வேலை வாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, என்பது போன்று 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதை தொடர்ந்து, பருவநிலை மாற்றங்களை தடுக்கும் வழிமுறைகளையும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதற்காக, பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பசுமை இல்லா வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதோடு, கார்பன் அளவையும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக இரு தலைவர்களும் கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து, பருவநிலை மாற்றங்கள் அதிகரிப்பில் அனைத்து நாடுகளுக்கும் பங்கு உள்ள நிலையில், அதை தடுக்கும் முயற்சியை அனைத்து நாடுகளும் இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை பயன்படுத்துவதால், ஆற்றலின் திறனை அதிகரிப்பதோடு, பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டலத்தில் கார்பன் அளவையும் குறைக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் பாரீஸ் ஒப்பந்தம் ஆகிய இரண்டும் பருவநிலை மாற்றத்தை தடுப்பதில், இருநாடுகளுக்கும் வழிகாட்டும் கட்டமைப்புகளாக இருந்து வருவதாக இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான திட்டங்களை மேற்கொள்வதிற்கு ஜெர்மனி அரசு 35 மில்லியன் யூரோக்களை ஒதுக்கவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் உறுதியளித்துள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close