வடமேற்கு திசை நோக்கி விலகி செல்லும் மஹா புயல்!!

  அபிநயா   | Last Modified : 02 Nov, 2019 03:36 pm
cyclone-maha-moves-towards-gujarat

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த மஹா புயல், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் நிலையில், கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில், நிலைக்கொண்டிருந்த மஹா புயல், நவம்பர் 4ஆம் தேதிக்குள் மேற்கு வடமேற்கு குஜராத் பகுதி நோக்கி விலகி செல்லும் நிலையில், அடுத்த 48மணி நேரத்தில் மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை தொடர்ந்து, மஹா புயலின் சீற்றத்தால், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்த வானிலை மையம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படும் எனவும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close