மஹா புயலால் 4 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

  அபிநயா   | Last Modified : 02 Nov, 2019 03:36 pm
light-rains-likely-in-punjab-haryana-rajasthan-and-delhi-on-november-7

வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் மஹா புயலால், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள மஹா புயல், வரும் நவம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் டெல்லி பிரதேசத்திலும் லேசான மிதமான மழையே ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆய்வு மையம் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். 

மேலும், இந்த மிதமான மழையினால், அந்த மாநிலங்களில் உள்ள மாசுக்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close