பிரதமர் மோடி - அதிபர் ஏஞ்சலா சந்திப்பு : உயர்கல்வியில் இந்தியா-ஜெர்மன் கூட்டு!!!

  அபிநயா   | Last Modified : 02 Nov, 2019 04:22 pm
pm-modi-german-president-angela-meet-work-towards-improvising-education

பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் சந்திப்பை தொடர்ந்து, திறமை மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இரண்டு நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார். இந்த உறையாடலின் முடிவாக வேலை வாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம் போன்று 17 ஒப்பந்தங்களும், 5 உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டன.

இதை தொடர்ந்து, திறமை மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறைகளில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள இரு நாட்டின் தலைவர்களும், மாணவர் பரிமாற்றத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். "உயர்கல்வியில் இந்தியா-ஜெர்மன் கூட்டு" என்ற விதியினை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 

இது குறித்து கூறிய ஜெர்மனியின் ஏஞ்சலை மெர்க்கெல், "இந்திய மாணவர்கள் அங்கு வந்து படிப்பதும், அங்குள்ளவர்கள் இந்தியா வந்து படிப்பதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. எனவே, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா-ஜெர்மனி இடையே நல்ல ஒரு நட்புறவு நிலவி வருகிறது. தற்போது 20,800 மாணவர்கள் ஜெர்மனியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். அதை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட நாங்கள் தீர்மானித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், மாணவர்கள் மட்டுமல்லாது, இந்திய ஆசிரியர்களும் எங்கள் நாட்டிற்கு தேவை என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close