அசிங்கமான முதல் 10 ரயில் நிலையங்களில் 4 தமிழகத்தில் உள்ளன!!!

  அபிநயா   | Last Modified : 02 Nov, 2019 09:42 pm
swatchh-rail-swatchh-bharat-report

இந்தியாவில், ரயில் நிலையங்களின் தூய்மைக்காக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், தமிழகத்தை சேர்ந்த 4 ரயில் நிலையங்கள் தூய்மையற்ற அசிங்கமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில், 4 இடங்களை பிடித்துள்ளன.

இந்திய ரயில் நிலையங்களின் தூய்மைக்கான ஸ்வட்ச் ரயில், ஸ்வட்ச் பாரத் கணக்கெடுப்பு, ஆண்டிற்கு ஒரு முறை, கழிவு மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் மேலாண்மை, புதிப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை வளர்ப்பு, கழிவறை வசதிகள் போன்ற அளவறுக்கள் கொண்டு மேற்கொள்ளப்படும்.

செயல்முறை மதிப்பீடு, நேரடி கவனிப்பு, குடிமக்களின் கருத்து, நிலைய மேலாளர் நேர்காணல் மற்றும் பசுமை ரயில் நிலையங்களின் மதிப்பெண் என 5 கட்டமாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், இம்முறை 611 புறநகர் அல்லாத ரயில் நிலைங்களும், 109 புறநகர் ரயில் நிலையங்களும் மதிப்பீடு செய்யப்பட்டன

அதில், மிகவும் தூய்மையற்ற அசிங்கமான ரயில் நிலையங்கள் பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த பெருங்குளத்தூர் ரயில் நிலையம் 1000 மதிப்பெண்களுக்கு 258.50 மதிப்பெண் பெற்று முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து, கூடுவாஞ்சேரி (286.32) மூன்றாம் இடத்திலும், சிங்கபெருமாள் கோவில் (334.12) நான்காம் இடத்திலும், ஒட்டபாலம் (346.76) ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன.

இதை தொடர்ந்து, சென்னையை சேர்ந்த, கிண்டி, வேலச்சேரி, பழவத்தாங்கல், மற்றும் தென்னை பீச் ஆகிய 4 ரயில் நிலையங்களும், தூய்மையற்ற புறநகர் ரயில் நிலையங்களுக்கான பட்டியலில், முதல் 10 இடங்களில் உள்ளன.

இதனிடையில், இரண்டு புறநகர் அல்லாத ரயில் நிலையங்களான, திண்டுக்கல் (860.04) மற்றும் சென்னை சென்ட்ரல் (846.88) ரயில் நிலையங்கள் தூய்மையான ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் 39 மற்றும் 58வது இடங்களை பிடித்துள்ளன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close