வெளியிடப்பட்டது புதிய இந்திய வரைபடம்!!!

  அபிநயா   | Last Modified : 03 Nov, 2019 02:36 pm
new-india-map

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் மாநிலங்கள் குறைந்து, யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கடந்த அக்டோபர் 31 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் கொண்ட இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close