சோபூரில் லாஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது!!

  அபிநயா   | Last Modified : 03 Nov, 2019 02:44 pm
sopore-lashkar-e-taiba-member-arrested

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான லாஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஒருவரை, நேற்று (சனிக்கிழமை) காஷ்மீர் போலீசாரும், இந்திய ராணுவத்தினரும் இணைந்து கைது செய்துள்ளனர். 

காஷ்மீரின் ஷோப்பியன் நகரில், 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவிருந்த பள்ளியில், பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பிரதேச போலீசாரும், இந்திய ராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்த தாக்குதலில் லாஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வரும் தாக்கதல்களில், பிற மாநிலங்களை சேர்ந்த மக்களும் உயிரிழக்கும் நிலையில், இந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மறு தாக்குதலில் இந்திய ராணுவம் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close