புதிய இந்திய வரைபடத்தில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள்!!

  அபிநயா   | Last Modified : 03 Nov, 2019 07:03 pm
govt-releases-new-map-pok-s-muzaffarabad-in-ut-of-j-k

நேற்று (நவம்பர் 2) மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான முசாபர்பூர் மற்றும் மிர்பூர் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் அதிகரித்து, மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள, புதிய இந்திய வரைபடத்தை நேற்று வெளியிட்டிருந்தது மத்திய அரசு.. 

இதை தொடர்ந்து, நேற்று வெளியிடபட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபர்பூர் மற்றும் மிர்பூர் பகுதிகள் ஜம்மு காஷ்மீருடனும், கார்கில் மற்றும் கில்கிட் பல்கிஸ்தான் பகுதிகள் லடாக் உடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனிடையில், சனிக்கிழமையான நேற்று, ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், லேஹ், கார்கில், கில்கித், கில்கித் வசாரத், 1947 ஆம் ஆண்டின் சில்ஹாஸ் மற்றும் ட்ரைபல் பிரதேசம் ஆகிய பகுதிகளை லடாக்குடன் இணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 1947ஆம் ஆண்டின் படி, கத்துவா, ஜம்மு, உதாம்பூர், ரியாஸி, அனந்த்நாக், பாராமுல்லாஹ், பூன்ச், மிர்பூர், முசாபர்பூர், லேஹ், லடாக், கில்கித், கில்கித் வசாராத்,  சில்ஹாஸ் மற்றும் ட்ரைபல் பிரதேசம் என 14 மாவட்டங்களை கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம், தற்போது பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, குப்பவாரா, பந்திபூர், கந்தெர்பால், புத்கம், புல்வாமா, ஷூபியன், குல்காம், ராஜௌரி, ரம்பன், தோடா, கிஷ்டிவார், சம்பா, கார்கில் மற்றும் ஸ்ரீநகர் என 14 புதிய மாவட்டங்கள் சேர்ந்து 28 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close