ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட மறுத்தது ஏன்??

  அபிநயா   | Last Modified : 05 Nov, 2019 02:44 pm
why-modi-rejected-rcep-negotiations

தாய்லாந்தில் நடைபெற்ற 3வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன் முக்கிய அம்சமான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு, இந்தியாவில் சீனா மேற்கொள்ளப்படும் அதிகபட்ச இறக்குமதியே முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. 

கடந்த 2005 ஆம் ஆண்டின் முடிவில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையான ட்ரேட் டெபிசிட் 1.9 பில்லியன் டாலராக இருந்ததை தொடர்ந்து, 2014ஆம் ஆண்டிற்குள் அது 23 மடங்காக உயர்ந்து 44.8 பில்லியன் டாலரை எட்டி நின்றது. 

இதற்கு இந்திய நாட்டில் சீனா மேற்கொள்ளும் அளவில்லா மலிவு விலை இறக்குமதியே காரணம். 
இந்திய சந்தைகளில் சீனாவின் இறக்குமதி அதிகரித்து கொண்டே சென்றதை தொடர்ந்து, இந்திய வர்த்தகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. 

பிராந்திய கூட்டமைப்பில் உள்ள 16 நாடுகளில் பொருளாதார ரீதியாக முன்னிலை வகுக்கும் சீனா, இது தொடர்பாக இந்தியா முன்வைத்த எந்த கருத்தையும் ஏற்காமல் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இதற்கு ஓர் தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் இந்த  பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. 

இந்நிலையில், எந்த ஓர் முக்கிய காரணத்திற்காக இந்தியா அங்கு சென்றதோ, அதுவே நிறைவேற்றபடாத நிலையில், அதிருப்தியடைந்த பிரதமர் இந்தியாவின் வருங்காலத்தை நினைவில் கொண்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த முடிவினால், இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழில் அதிபர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close