ஜிடிபிக்கான புதிய அடிப்படை ஆண்டை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு!!

  அபிநயா   | Last Modified : 05 Nov, 2019 09:57 pm
amid-economic-slowdown-govt-to-decide-new-base-year-for-gdp-in-few-months

இந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் ஜிடிபி மிக குறைவான வேகத்துடன் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொருளாதார மந்த நிலையை மனதில் கொண்டு, ஜிடிபிக்கான புதிய அடிப்படை ஆண்டை தீர்மானிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்.

இதுவரை இந்திய ஜிடிபிக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆக கருதப்பட்டு வந்ததை தொடர்ந்து, தற்போது 2017-18 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக அறிவிக்கலாம் என்பது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளார் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளரான ஸ்ரீவத்ஸா.

"வருடாந்திர தொழில்களின் கணக்கெடுப்பு மற்றும் நுகர்வோர் செலவுக் கணக்கெடுப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டதும், சம்பந்தபட்ட துறைகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பிறகு, இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீவத்ஸா.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close