யாம் கண்ட பிரதமர்களிலே மிகச் சிறந்தவர் மோடி - ரே தலியோ புகழாரம்!!

  அபிநயா   | Last Modified : 08 Nov, 2019 05:31 pm
one-of-the-best-if-not-the-best-leaders-in-world-us-billionaire-lauds-narendra-modi-pm-responds

சவுதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்தித்த பிரிஜ்வாட்டர் அசோசியேட்ஸின் தலைவர் ரே தலியோ, மிகச் சிறந்த பிரதமர்களில் சிறந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று புகழ்ந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, சவுதி அரேபியாவின் தலைநகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரிஜ்வாட்டர் அசோசியேட்ஸின் தலைவர் ரே தலியோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தனது நெடுநாள் ஆசை என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் இணைந்து மேடையில் அமர்வது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த தலியோ, தான் கண்ட பிரதமர்களுள் மிகச் சிறந்தவர் மோடி என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து, அவருடனான சுவாரஸ்யாமான கலந்துரையாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரிஜ்வாட்டர் அசோசியேட்ஸ் தலைவர் ரே தலியோ.

 

 

இவரின் இந்த பதிவிற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ""யாம் கண்ட பிரதமர்களிலே மிகச் சிறந்தவர் மோடி" - இந்த பதிவிற்கு வரும் பதில்களை பார்த்துவிட்டால், நம் கலந்துரையாடலின் போது உரையாடிய தியான முறையை தாங்களும் பின்பற்றி அதன் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்" என்று நகைச்சுவை உணர்வு ததும்ப பதிலளித்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close