அரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறை செயல்படுத்தப்பட வேண்டும் - இந்தியா!!

  அபிநயா   | Last Modified : 08 Nov, 2019 09:53 pm
every-country-should-join-hands-against-terror-india

பாகிஸ்தானை சாம்பல் நிறபட்டியலில் வைக்கும்படியான, பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் உத்தரவை தொடர்ந்து, சர்வதேச அளவில், அரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளது இந்தியா.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற "பயங்கரவாதத்திற்கு நிதியுதவி இல்லை" என்ற மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த கிஷான் ரெட்டி, பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை இன்று வரை பெருமளவு சகித்துக் கொண்டிருக்கும் இந்தியா, இனியும் அத்தகைய ஓர் பொறுமை நிலையை பின்பற்ற தயாராக இல்லை என்று கூறியுள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு, ஒசாமா பின்லாடனின் இறப்பை தொடர்ந்து, உலகம் அமைதி பூங்காவாக மாறும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமளிக்கும் நிலையில், இன்றளவும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது அவரின் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ள கிஷான், அபு பக்கர் அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்தும் இத்தகைய நிலை தான் தொடரும் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக அதற்கு பலியாகும் நாடுகள் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகள் அனைத்தும் கைகோர்த்து ஒன்றிணைந்து, அரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறையை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் கிஷான் ரெட்டி. 

இந்த ஆண்டிற்கான "பயங்கரவாதத்திற்கு நிதியுதவி இல்லை" மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றத்தை தொடர்ந்து, வரும் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close