வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தியா தீர்ப்பு - அறியப்பட வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!!

  அபிநயா   | Last Modified : 09 Nov, 2019 02:18 pm
supreme-court-s-historic-ayodhya-verdict-in-5-points

அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரமான அயோத்தியாவில் உள்ள ராமஜன்ம பூமி, விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமரது பிறப்பிடமாக இந்து இன மக்களால் பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது.

இந்த ராமஜன்ம பூமியை இடித்துவிட்டு, மொகலாய அரசரான பாபரின் படைத்தலைவர், முஸ்லீம்களின் வழிபாட்டு தலமான பாப்ரி மஸ்ஜித் என்னும் மசூதியை எழுப்பியதாகவும், அதன் பின்னர் தொடங்கிய ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில், இரு இனத்தவரும் வழிபடும் வகையில், ராமஜன்ம பூமி மாற்றி அமைக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இதை தொடர்ந்து, கடந்த 1992 ஆம் ஆண்டு, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் சர்ச்சையினால், அன்றிலிருந்து இன்றுவரை, இந்து முஸ்லீம், இருதரப்பினரும், அயோத்தியாவின் ராமஜன்ம பூமி தங்களுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்து அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு, மேல் முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அவ்வழக்கிற்கான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. 

இதன்படி, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சர்ச்சைகுறிய அயோத்தியா நிலத்தில் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் மனு தாக்கல் செய்திருந்த சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகளின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் போது கூறப்பட்ட 5 முக்கிய விபரங்களை தற்போது பார்க்கலாம் :

1. அயோத்தியா வழக்கில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்த வழக்கில் வெறும் நம்பிக்கையை வைத்து மட்டும் தீர்ப்பு அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

2. தற்போது இடிக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அடியில் ஏற்கனவே ஓர் கட்டிடம் இருந்ததற்கான ஆதாரம் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது முஸ்லிம்களின் கட்டிட வடிவத்தில் அமைக்கப்படவில்லை என்பது இந்த வழக்கில் மிகவும் முக்கியமாக கருதப்பட வேண்டிய விஷயம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.

3. 1857ஆம் ஆண்டிற்கு முன்னர், வழக்குத்தொடரப்பட்டுள்ள இந்த இடத்தில் இந்துக்களும் வழிப்பட்டு வந்துள்ளனர் என்ற கூறிய நீதிபதி, கடந்த நூற்றாண்டுகளில் இந்துக்களுக்கு ராம்ஜன்ம பூமியில் வழிபட அனுமதியளிக்கப்பட்டிருந்தது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

4. அயோத்தியாவில் முஸ்லிம்களுடைய பகுதி என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் எவ்வகையான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார் ரஞ்சன் கோகாய்.

5. இவற்றின் அடிப்படையில், அயோத்தியா அரசாங்கத்திற்கு சொந்தமான இடம் என்றும், அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை தொடங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான பணிகள் 3 மாதத்திற்குள்வகுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close