அயோத்தியா வரலாறு : கி.பி 1528 முதல் இன்றுவரை !!!

  அபிநயா   | Last Modified : 09 Nov, 2019 03:07 pm
ayodhya-verdict-1528-to-now-a-10-point-timeline-of-the-case

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகரில், மொகலாய பேரரசர் பாபரின் படை தலைவரால் கி.பி. 1528ஆம் ஆண்டு கட்டப்பட்டது பாபர் மசூதி. இந்த கட்டிடம் ஏற்கனவே அங்கு கட்டப்பட்டிருந்த ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக கடந்த 1853ஆம் ஆண்டு இந்துக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு, இரு மதத்தினருக்கும் முதல் முறையாக மோதல் வெடித்தது.

இந்த மோதலுக்கு தீர்வு காண எண்ணிய, இந்தியாவின் அப்போதைய ஆங்கிலேய அரசு, அந்த இடத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனியே வழிப்பாட்டு தலங்கள் அமைத்து கொடுத்தனர். பிரிட்டீஷ் அரசின் இந்த செயல்முறையால் பின்னர் வந்த 90 ஆண்டுகளுக்கு எந்த விவகாரமும் தலை தூக்கவில்லை. 

இதன் பின்னர் கடந்த 1949ஆம் ஆண்டு, முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமான மசூதியில் ராமர் சிலைகள் வைக்கப்பட்டதை தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையான இந்த விவகாரம் முதல் முறையாக நீதிமன்ற வாயிலை அடைந்தது. 

இதை தொடர்ந்து, கடந்த 1984ஆம் ஆண்டு, இந்த மசூதியின் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டு, அதே பகுதியில் இந்துக்களின் வழிப்பாட்டிற்கும் இடமளிக்கப்பட்டது. இதனிடையில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு அருகில் ஏற்கனவே ஓர் கட்டிடம் அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கடந்த 1990ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.கே. அத்வானி இந்துக்களுக்கு ஆதரவாக ராமர் கோவில் அமைப்பதற்கான பணிகள் தொடங்குமாறு கோரிக்கை விடுத்து ரத யாத்திரை மேற்கொண்டார். 

இதன் பின்னர், கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, சில இந்துக்களால், பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக டிசம்பர் 16ஆம் தேதி, லைபர்ஹான் கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் 17ஆண்டுகளுக்கு பின்னர் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், எல்.கே. அத்வானி உட்பட பல பாஜக தலைவர்கள் பாபர் மசூதியின் அழிவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டனர். இந்நிலையில், அயோத்தியாவின் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வியெழுப்பட்டு, அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு, சர்ச்சைக்குரிய இந்த பகுதியை சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம்லல்லா ஆகிய 3 அமைப்புகளுக்கும் சரிசமமாக பிரித்து வழங்க உத்தரவிட்டது. 

ஆனால், அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுகொள்ளாத 3 அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷன் நீதிபதிகள் அமைந்த அமர்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான ஓர் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின்படி, அயோத்தியாவின் சர்ச்சைகுரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆவணங்கள் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Newstm.in

 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close