அயோத்தியா வழக்கு : அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏன் தவறானது - உச்ச நீதிமன்றம் பதில்!!

  அபிநயா   | Last Modified : 09 Nov, 2019 04:38 pm
why-was-allahabad-high-court-wrong-in-partitioning-disputed-land-in-three-parts-sc-explains

அயோத்தியா வழக்கிற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அயோத்தியா வழக்கிற்கான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதை தொடர்ந்து, இதற்கான தீர்ப்பை வாசிக்கும் போது, கடந்த 2010ஆம் ஆண்டு இதன் விசாரணையை மேற்கொண்டிருந்த அலகாபாத் நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அதற்கான விளக்கத்தை தற்போது குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கிற்கான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சர்ச்சைகுரிய இந்த பகுதியை, மனு தாக்கல் செய்யப்பட்ட 3 பிரிவினருக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கும் படியாக வழங்கப்பட்டுள்ளது. இது மாதிரியான வழக்குகளில், சாதாரண சட்டத்தின்படி, ஒவ்வொரு பிரிவினரும் வாதியாகவும் பிரதிவாதியாகவும் கருதப்பட வேண்டும். 

இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில், வழிபாட்டுக்கான உரிமை கோரிய பக்தர், கோவிலை நிர்வகிக்கும் பொறுப்புரிமை கோரிய நிர்மோஹி அகாரா, நிலத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃப் வாரியம் மற்றும் முஸ்லிம்கள், புதிதாக அமைக்கப்படும் ஆலயத்திற்கு எந்த தடைகளும் விதிக்கப்படக்கூடாது என்று ராம ஜென் பூமியில் அமைந்திருந்த ஆலயத்தின் மூலவரான ராம் லாலா சார்பாக விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை சார்பான கோரிக்கை மனு என 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய அலகாபாத் நிதிமன்றம், இந்த மனுதாரர்களின் மனுக்களை ஏற்று தீர்ப்பு வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பிரச்சனை ஏற்படாத ரீதியில் தீர்ப்பு வழங்குவதாக நினைத்து விதிகளை பின்பற்ற மறந்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close