இம்ரான் கானிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!!

  அபிநயா   | Last Modified : 09 Nov, 2019 04:38 pm
kartarpur-sahib-corridor-on-kartarpur-pm-thanks-imran-khan-for-understanding-india-s-sentiments

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர் வழித்தடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்கின் நினைவாக கட்டப்பட்ட பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம் பிரதமர் மோடியால் இன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய மக்களின் உணர்வை புரிந்து கொண்டு, அவற்றிற்கு மதிப்பளித்த காரணத்திற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு தனது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

இதனிடையில், வரும் நவம்பர் 12ஆம் தேதியன்று குருநானக்கின் 550வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ராத் பதால் மற்றும் ஹர்தீப் பூரி ஆகியோரும் பாகிஸ்தானின் கர்தார்பூரிக்கு பயணிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் கர்தார்பூர் திறப்பு விழாவை தங்களது எல்லை பகுதியில் கொண்டாடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close