அயோத்தியா வழக்கு தீர்ப்பு : மறுபரிசீலனை செய்வோம் என்று கூறும் சன்னி வக்ஃப் வாரியம்!!

  அபிநயா   | Last Modified : 09 Nov, 2019 06:42 pm
not-satisfied-with-ayodhya-case-outcome-will-seek-review-sunni-waqf-board-lawyer-zafaryab-jilani

அயோத்தியா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனதிற்கு நிறைவாக இல்லை என்பதால் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு கொண்டு செல்லவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் சன்னி வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் சஃபர்யாம் ஜிலானி.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சர்ச்சைக்குரிய அந்த நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அதில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்கான அறிக்கையை மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியதோடு, இஸ்லாமியர்களுக்கென்று தனியாக 5 ஏக்கர் நிலமும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மரியாதை அளித்தாலும், முழு திருப்தியும் மனநிறைவும் இல்லாததால் இந்த வழக்கினை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அளிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார் இந்த வழக்கின் மனுதாரர்களுள் ஒருவரான சன்னி வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் சஃபர்யாம் ஜிலானி. 

சன்னி வாரியத்தின் நிலைபாடு இப்படியாக இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து நிம்மதியில் உள்ள இந்து மஹாசபையின் வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா, வரலாற்று சிறப்புமிக்க இந்த வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கியதன் மூலம் இந்தியாவின் வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற சிறப்பினை உலகிற்கு உச்ச நீதிமன்றம் உணர்த்தியுள்ளதாக என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close