அயோத்தியா வழக்கு தீர்ப்பு : மிகவும் சரியான தீர்ப்பு - தொல்லியல் ஆய்வாளர் கே.கே.முஹமது பாராட்டு!!

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 04:06 pm
ex-asi-director-kk-mohammed-hails-sc-verdict-in-ayodhya-case-as-the-most-perfect-judgment

அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தான் எதிர்பார்த்ததை விட மிகவும் பொருத்தமான தீர்ப்பாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் தொல்லியல் ஆய்வாளரான கே.கே.முஹமது.

அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதன்படி, சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என அறிவித்துள்ள ரஞ்சன் கோகாய் அமர்வு, அங்கு ராமர் கோவில் கட்டுவதற்காக ஓர் அறக்கட்டளை அமைத்து, 3 மாதத்திற்குள் அறிக்கைகள் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கபட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு யாரையும் புண்படுத்தும் வகையில் இல்லை எனவும், தான் எதிர்பார்த்ததை விட மிக சரியான தீர்ப்பாக இது அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார் தொல்லியல் ஆராய்ச்சியாளரான கே.கே.முஹமது. 

மேலும், இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமாக மெக்கா மெதினா கருதப்படுவதை போல, ராமரின் பிறப்பிடமாக கருதப்படும் ராம்ஜன்ம பூமி இந்துக்களுக்கு முக்கயம் வாய்ந்த இடமாகும் என்று கூறிய முஹமது, இஸ்லாமியர்கள் இதிலிருக்கும் உண்மையை உணர்ந்து எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றில் இடம்பெறும் அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியர்கள் அனைவரும் மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகளை பார்க்காமல் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் தொல்லியல் ஆய்வாளர் கே.கே.முஹமது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close