பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!!

  அபிநயா   | Last Modified : 13 Nov, 2019 12:49 pm
brics-summit-will-focus-on-building-mechanisms-for-counter-terrorism-cooperation-pm-modi

11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (செவ்வாய்கிழமை) பிரேசில் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, உலகின் 5 முக்கிய பொருளாதார நாடுகளும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற தனது கருத்தை தற்போது முன்வைத்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் இணைப்பு தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. உலக மக்கள் தொகையில் 42 சதவீதமும், உலகளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 17 சதவீதமும் கொண்டுள்ள உலகின் 5 முக்கிய பொருளாதார நாடுகளை கொண்டிருக்கும் இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் 11வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தான் நேற்று பிரேசில் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு, "புதுமையான வருங்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி" என்ற தலைப்பில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களான, சர்வதேச பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 5 நாடுகளும், டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிற நாட்டு தலைவர்களை சந்தித்து பொருளாதார வளர்ச்சி குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பொருளாதார நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவது குறித்த பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையில், பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய மேம்பாட்டு வங்கியின் உறுப்பினர்களை சந்தித்து, இந்தியாவின் வளர்ச்சி குறித்த கலந்துரையாடலில் அவர் ஈடுபடவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும், பிரேசில் அதிபரை சந்தித்து, பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம், எரிப்பொருள் ஆற்றல் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா-பிரேசில் இடையான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடவிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரிக்ஸ் மாநாடு உலகின் முக்கிய தலைவர்களை சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதனால் அதற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி பங்கு கொண்டிருக்கும் 6வது பிரிக்ஸ் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close