உத்தரகண்ட் மாநிலம் : ராணுவ தளத்தை பலப்படுத்தும் சீனா!!

  அபிநயா   | Last Modified : 13 Nov, 2019 03:38 pm
china-strengthening-military-base-near-uttarakhand-s-lipulekh-pass

இந்தியா-நேபாளம்-சீனா முத்தரப்பு சந்திப்பில், உத்தரகண்ட் மாநிலத்தில் லிபுலேக் பாஸுக்கு எதிராக சீன ராணுவத்தினரின் ராணுவ தளம் கட்டமைப்புக்கான அறிகுறிகள் தெரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்திய உளவுத்துறையின் சமீபத்திய தகவலின்படி, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ இயக்கம், உத்தரகண்ட் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லிபுலேக் பாஸுக்கு எதிரே, ஒரு ஹெலிபேட்டை உருவாக்கியுள்ளது. இதை தொடர்ந்து, இரண்டு கண்காணிப்பு கேமராக்களும், நீண்ட தூர புலனாய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பு எனப்படும் லாரூஸ் மற்றும் சூரிய பேனல் ஆகியவையும் பொறுத்தப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதை தொடர்ந்து, சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கன்சு மாகாணத்தின் பிங்சுவானில், இந்த மக்கள் விடுதலை ராணுவ இயக்கம், ஒரு ராணுவ தளத்தையும் கட்டியுள்ளது. புதிதாக கட்டப்பட்டிருக்கும் இந்த தளத்தில் 20 பார்க்கிங் ஹேங்கர்கள் மற்றும் பராமரிப்பு ஹேங்கர்கள்அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

மேலும், உள்நாட்டு ராணுவ விமான படையினருக்காக, நடுத்தர ஹெலிகாப்டர்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையில், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 விமான பாதுகாப்பு அமைப்பை பெற்றுள்ளது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ இயக்கம். இதனை தொடர்ந்து, தற்போது 6 பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ள சீனா, அதில் ஒன்றை சீனா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஜூவார் பகுதியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விமானப்படையினருக்காக எஸ்-400 களை ரஷ்யாவிடமிருந்து பெறுவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close