யுனெஸ்கோ மாநாடு : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி !!

  அபிநயா   | Last Modified : 14 Nov, 2019 01:44 pm
india-slams-pakistan-for-creating-unwanted-lies

40வது யுனெஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் இந்தியா, ஜம்மு காஷ்மீர் விவகாரம் மட்டுமில்லாமல், அயோத்தியா தீர்ப்பிலும் தேவையில்லாமல் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வரும் பாகிஸ்தானிற்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் பதிலளித்துள்ளது. 

பாரிஸில் நடைபெறும் 40வது யுனெஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பாகிஸ்தானின் கல்வி அமைச்சர் ஷப்கட் மஹ்மூத், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, யுனெஸ்கோவின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார். 

இவரை தொடர்ந்து, யுனெஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய பிரதிநி, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் தேவையில்லாமல் தலையிடுவதை பாகிஸ்தான் ஓர் வழக்கமாக கொண்டுள்ளதாகவும், இந்தியாவை பற்றிய தவறான கருத்துக்களை தான் தொடக்கம் முதல் பாகிஸ்தான் பரப்பிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

"இந்தியாவை பொறுத்த வரை, அமைதியான வாழ்விற்கான உரிமையை இந்திய மக்களுக்கு அளிப்பதை தான் முதல் கடமையாக கொண்டுள்ளது. ஆனால், மக்களின் பாதுகாப்பு என்பதை குறித்து சிறிதளவும் சிந்திக்காத பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறது. மக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்படுவதையே தொடர்ச்சியாக செய்து வருகிறது பாகிஸ்தான். இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் இந்தியாவை பற்றி கூறும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டது" என்று தக்க பதிலடி அளிக்கும் வகையில் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close