காஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை - சுனந்தா வஷிஷ்ட் திட்டவட்டம்!!

  அபிநயா   | Last Modified : 15 Nov, 2019 12:50 pm
there-is-no-india-withou-kashmir-sunanda-vashisht

அமெரிக்காவில் நடைபெற்ற டாம் லாட்டோஸ் மனித உரிமை குழு சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய கட்டுரையாளர் சுனந்தா வஷிஷ்ட், பிற நாடுகளில் பயங்கரவாதம் என்பதன் வாசம் தெரிவதற்கு முன்பே அதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் காஷ்மீர் மக்கள் என்று கூறி இந்தியாவுடன் இணைந்திருக்கும் தற்போதைய காஷ்மீர் நிலையில் காணப்படும் முன்னேற்றங்களை சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 4 வாரங்களாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை குழு சந்திப்பில், ஜம்மு காஷ்மீர் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றிய கட்டுரையாளர் சுனந்தா வஷிஷ்ட், "பயங்கரவாதம் என்ற ஒன்று உலக நாடுகளுக்கு அறிய படுவதற்கு முன்பே அதன் தாக்குதல்களையும் பாதிக்கப்புகளையும் சந்திக்க தொடங்கியிருந்தவர்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒருபுறம், பயங்கரவாதிகள் ஒருபுறம் என்று பல வகையில் அவதிக்குள்ளானவர்கள்.

இப்போது காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாகவும், கொடுமை படுத்துவதாகவும் தொடர்ந்து குற்றம் சுமத்துபவர்கள் 1990களில் என் குடும்பம் போன்று ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான போது ஏன் வரவில்லை என்று கேள்வியெழுப்பி, இந்தியா என்பது வெறும் 70 வருட அடையாளம் மட்டுமல்ல, 5000 ஆண்டு கால நாகரிகம். அப்போதிருந்தே இந்தியாவின் ஒருபகுதிதான் காஷ்மீர். இதை யாராலும் மாற்ற முடியாது என்று முடிவாக கூறியுள்ளார்.

மேலும், "ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை மக்கள் ஓட்டை பெற்றபின் இணைப்பு குறித்த முடிவுகளை எடுக்கலாம் அல்லது காஷ்மீர் ஆக்கிரமிப்பு போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை என்று கூறியுள்ள சுனந்தா வஷிஷ்ட், இனி வரும் காலங்களில், காஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை என்றும் இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை என்றும் திட்டவட்டமான கருத்தை முன்வைத்துள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close