அமெரிக்காவில் நடைபெற்ற மனித உரிமை குழு சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய கட்டுரையாளர் சுனந்தா வஷிஷ்டின் பேச்சு இந்தியாவின் நிலைபாட்டை எடுத்துரைக்கும் விதமாக இருந்ததாக வெகுவாக புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய பத்திர்க்கையாளரான ஆர்த்தி டிக்கு சிங்.
அமெரிக்காவில், கடந்த மாதம் நடைபெற்ற வெளியுறவு குழு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய பத்திர்க்கையாளர் ஆர்த்தி டிக்கு சிங், பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை அத்துமீறல்கள் தொடர்ந்து வருவதாகவும், அவற்றை குறித்த செய்திகளை வெளிகொண்டுவர பத்திரிக்கையோ, மனித உரிமை ஆர்வலர்களோ தயாராக இல்லை எனவும் பாகிஸ்தானின் மனித உரிமை அத்துமீறல்களை கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, இவரது கருத்துக்களுக்கு வெகுவாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான இலான் ஒமர். இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற மனித உரிமை குழு சந்திப்பில் உரையாற்றிய இந்திய கட்டுரையாளர் சுனந்தா வஷிஷ்ட், இந்தியாவுடன் இணைந்திருக்கும் தற்போதைய காஷ்மீர் நிலையில் காணப்படும் முன்னேற்றங்களை மிக தெளிவாக சுட்டிக் காட்டியிருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் நிலைபாட்டை எடுத்துரைக்கும் வகையில் அவரது பேச்சு இருந்ததாகவும், காஷ்மீர் குறித்த அவரது கருத்துக்களை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்த்தி டிக்கு சிங்.
Newstm.in