2020ஆம் ஆண்டிற்குள் இந்தியா வந்தடையும் எஸ்-400 ஏவுகணை!!!

  அபிநயா   | Last Modified : 15 Nov, 2019 02:33 pm
s-400-missile-defence-system-delivery-on-track

ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறவிருக்கும் எஸ்-400 ஏவுகணைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இருநாடுகளுக்கும் இடையான உச்சி மாநாட்டில் சந்தித்து உரையாற்றிய இந்தியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் இருவரும், இந்திய ராணுவத்திற்காக 5.4 டாலர் மதிப்புள்ள 5 எஸ்-400 ஏவுகணைகள் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இதனிடையில், முதல் எஸ்-400 ஏவுகணை வரும் 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ரஷ்யா வாக்களித்திருந்தது. இதை தொடர்ந்து, தற்போதைய நிலவரத்தின்படி, அடுத்த ஆண்டிற்குள் முதல் எஸ்-400 ஏவுகணை இந்தியா வந்தடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் பெற வேண்டாம் என்று இந்தியாவிடம் பலமுறை கூறி வந்த அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், இந்தியா யாரிடமிருந்து என்ன பெற வேண்டும் என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கான உரிமைகளை இந்தியாவிடமிருந்து யாரும் பறிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close