நுகர்வேர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு முடிவுகள் தற்போதைக்கு வெளியிடப்படாது: மத்திய அரசு!!!

  அபிநயா   | Last Modified : 15 Nov, 2019 09:10 pm
2017-18-consumer-spending-survey-won-t-be-released

கடந்த 2017-18 நிதியாண்டுக்கான நுகர்வோர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு அறிக்கை தற்போது வெளியடப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது . 

நுகர்வோர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்விற்காக திரட்டப்படும் தரவுகள் எதிர்பார்க்கப்படும் தர நிர்ணய அளவில் இருப்பதில் பிரச்னைகள் எழுந்து வருவதால், சரியான கால இடைவெளியில் மத்திய அரசினால் வெளியிடப்பட்டு வரும் கன்ஸ்யூமர் ஸ்பெண்டிங் சர்வே எனப்படும் நுகர்வோர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு முடிவுகள் தற்போதைக்கு வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரட்டப்படும் தரவுகள் குறித்த தர நிர்ணயத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்ட பிறகு நுகர்வோர் செலவு செய்யும் விதம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் எனவும் மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close