இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயலாற்றி வரும் பயங்கரவாத முகாம்கள் - வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவல்!!!

  அபிநயா   | Last Modified : 17 Nov, 2019 02:35 pm
imran-khan-s-posturing-aside-terror-training-camps-still-active-in-pakistan

இந்தியாவின் எச்சரிக்கையும், சர்வதேச நாடுகளின் கோரிக்கையையும் தொடர்ந்தும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறையவில்லை எனவும், ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அனைத்திற்கும் பாகிஸ்தான் முகாமில் இருக்கும் பயங்கரவாதிகள் தான் காரணம் என்றும் கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு பிரதேசங்களாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வந்தன. இவர்களை தொடர்ந்து, பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட லாஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ் இ முஹமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்களும் அதிகரித்து வந்தன.

இதை தொடர்ந்து, காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், இந்த தாக்குதல்களில் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றும் பொருட்டு பல்வேறு மறுதாக்குதலில் ஈடுபட்டு வந்தனர் இந்திய ராணுவத்தினர். இதனிடையில் கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், பாகிஸ்தானில் இன்னும் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகிறது என்ற திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

இந்திய உளவுத்துறை தகவலின்படி, பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முஹமது, லாஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் முகாம்கள் அமைத்திருப்பதோடு, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மன்ஷேரா, பெஷாவர், பவால்புர், லாகூர் போன்ற பகுதிகள் அவர்கள் நடமாட்டங்கள் தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு வகையான செயல்களில் ஈடுபட்ட வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய எல்லை பகுதியில் ஆயுதங்கள் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் இந்திய ராணுவத்தினர் அவர்களின் முயற்சிகளை முறியடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close