நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் - இன்றைய விவாதங்கள்!!

  அபிநயா   | Last Modified : 20 Nov, 2019 02:44 pm
parliament-winter-session-2019

கடந்த நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் 2019, வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கட்டுபாடுகள், டெல்லி காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று அதை 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்த மத்திய அரசு அதை தொடர்ந்து அங்கு மேற்கொண்டிருந்த பல்வேறு பாதுகாப்பு கட்டுபாடுகள் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்டர்நெட் சேவையும் வெகு விரைவில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட 3 மாதங்களில் அங்கு அப்பாவி மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக அங்கு பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இதை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கும் சிறப்பு பாதுகாப்பு குறித்து எழுப்பபப்பட்ட கேள்விகளுக்கு, அச்சுறுத்தல்களை பொறுத்தே பாதுகாப்புகள் வழங்கப்படும் நிலையில், எந்த அச்சுறுத்தல்களும் இல்லாத காரணத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் பாஜக தலைவர் செ.பி.நட்டா.

இதை தொடர்ந்து, இந்திய பொருளாதார நிலை, விவசாயிகளின் நிலை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் குறித்த எதிர்கட்சியின் கேள்விக்கு பாரதிய ஜனதா கட்சியின் பதில்களை தொடர்ந்து, மாநிலங்களவையில், வாகை (ஒழுங்குமுறை) மசோதா மற்றும் திருநங்கைகள் (உரிமைகள்) மசோதா குறித்தும் விரிவாக கலந்துரையாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close