ராஜபக்சே சகோதரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து!!

  அபிநயா   | Last Modified : 21 Nov, 2019 07:24 pm
pakistan-pm-imran-khan-extends-invitation-to-srilankan-president-rajapakse

இலங்கை : குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்கும் ராஜபக்சே சகோதரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வசதியான ஓர் நாளில் தங்களது நாட்டிற்கு வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் அதிபராக கோத்தபயா ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், புதிய பிரதமராக இன்று அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். இதை தொடர்ந்து, இவ்விருவருக்கும் இந்தியா உட்பட பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருவதை தொடர்ந்து, கோத்தபயா ராஜபக்சேவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்தை பதிவி செய்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். மேலும், விரைவில் ஓர் நாள் பாகிஸ்தான் வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் தூதரகம் கூறுகையில், பிரதமரின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வர கோத்தபயா ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்சே சகோதரர்களின் வெற்றியை தொடர்ந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கடந்த செவ்வாயன்று இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று வரும் நவம்பர் 29ஆம் தேதியன்று இந்தியா வரவுள்ளார் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே. அதிபராக பதிவியேற்றதை தொடர்ந்து, அவர் மேற்கொள்ளவிருக்கும் முதல் அயல்நாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close