மகாராஷ்டிரா மாநில ஆட்சி அமைப்பது குறித்த விவகாரங்களை தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டு வரும் 70வது ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விழாவை புறக்கணிக்கவிருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அதன் 70வது ஆண்டு விழா நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின் 70ஆண்டு கால விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உறையாற்ற உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி அமைப்பு குறித்த சிக்கல்களை காரணம் காட்டி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70 ஆண்டு கால விழாவில் பங்கேற்க போவதில்லை என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்ததே இந்திய சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் நிலையில், இன்று கொண்டாடப்படும் அரசியலமைப்பு விழாவிற்கு அர்த்தமே இல்லை என்று கூறும் எதிர்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தகவலின்படி, எதிர்கட்சிகளான காங்கிரஸ், இடது சாரிக் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி, டி.எம்.சி, ஆர்.ஜே.டி. செலுங்கு தேசம் கட்சி மற்றும் திமுக ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற வாயிலின் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநில விவசாயிகளின் நிலையையும், சட்டம் மற்றும் ஒழுங்கு சரியாக பின்பற்ற படுவதில்லை என்பதையும் காரணம் காட்டி சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் அம்மாநில அசெம்பிலி முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Newstm.in