70வது இந்திய அரசியலமைப்பு சட்ட விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்!!!

  அபிநயா   | Last Modified : 26 Nov, 2019 02:01 pm
president-ram-nath-kovind-addresses-parliament-constitution-day-speech

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70வது ஆண்டு கால விழா, தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவ்விழாவில் உரையாற்றியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டு இன்றுடன் 70 ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதற்கான விழா தற்போது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி அமைப்பது குறித்த சிக்கல்களை காரணம் காட்டி, எதிர்கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்க மறுப்பு தெரிவித்திருத்துள்ளன

இந்நிலையில், அவ்விழாவில் உரையாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70வது அண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களுக்கு தனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மிகபெரும் ஜனநாயக நாடாக இந்தியா இன்று கருதப்படுவதற்கு மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றாக திகழ்வது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்றும், இதன் மூலம் தான் ஜனநாயகம் என்பதன் அர்த்தமே உலகத்திற்கு புரிய தொடங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகையில், நாட்டு மக்களின் நன்னடத்தையும், ஒழுக்கமும் தான் இந்த அரசியலமைப்பு சட்டத்தின் மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, இவரின் கனவை நினைவாக்குவது இந்தியர்களின் கையில் உள்ளது என்று கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close