மும்பை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் மலர் அஞ்சலி!!

  அபிநயா   | Last Modified : 26 Nov, 2019 03:00 pm
floral-tributes-paid-to-martyrs-on-11th-anniversary-of-26-11-mumbai-attack

கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மும்பை தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும், பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உட்பட பல அதிகாரிகளும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் 29 வரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும், இன்று தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் நினைவு தளத்தில் வைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அம்மாநில முதலமைச்சர் பகத் சிங் கோஷ்யாரி இருவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த நவம்பர் 26, 2008 ஆம் ஆண்டு, கடல் வழியே இந்தியாவிற்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி மகாராஜ் செர்மினஸ், ஓபராய் ட்ரைடென்ட், தாஜ் ஹோட்டல், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை மற்றும் இப்போது நரிமன் லைட் ஹவுஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ள நரிமன் ஹவுஸ் யூத சமூகம் ஆகியவை இடங்களை தாக்கினர். இவர்களின் தாக்குதலினால் 18 பாதுகாப்பு வீரர்கள் உட்பட, 166 பேரை உயிரிழந்ததுடன், கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதை தொடர்ந்து, இச்சம்பவம் நடைபெற்று 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாநில தலைமை செயலாளர் அஜோய் மேத்தா, போலீஸ் டைரக்டர் ஜெனரல் சுபோத் குமார் ஜெயஸ்வால், மும்பை  போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே மற்றும் இச்சம்பவத்தால் உயிரிழந்த காவல் துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் உயிரிழந்தோருக்கு இன்று மலர் அஞ்சலி செலுத்தினர். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close