இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்...  உலக நாடுகள் எச்சரிக்கை!

  அனிதா   | Last Modified : 15 Dec, 2019 03:15 pm
citizenship-bill-s-impact-in-others-countries


பாதுகாப்பான ஜனநாயக நாடான இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குடியுரிமை சட்டத்தை ஆளும் பாஜக அரசு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தாலும் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் போராட்டத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அங்கு என்ன நடக்கிறது என்பதை உலக அரங்கிற்கு தெரியப்படுத்தாமல் தடுப்பதற்கும் தொலைத் தொடர்பு சேவைகள் அசாம் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் முடக்கப்பட்டிருக்கின்றன.

தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டும் மக்களின் எழுச்சியைக் கட்டுப் படுத்த முடியாததால் இன்று காலை முதல் மாலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் வட கிழக்கு இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டுப் பயணிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் தங்கள் நாட்டு மக்களை இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் ஐநாவும் தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக உலக நாடுகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close