ரத்தம் சொட்ட சொட்ட மாணவர்களின் மீது தாக்குதல்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!! 

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 10:03 am
jnu-students-attacked

நேற்று மாலை டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்திய பேரணியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடத்திய இந்த தாக்குதலில் பல மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் பலத்த காயமடைந்தனர். 

மாணவர்களின் மீதான இந்த தாக்குதல் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நிர்மலா சீதாராமன், ஜேஎன்யூ நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கிருந்து வரும் புகைப்படங்கள் அதிர்ச்சி தருகிறது. எனக்கு தெரிந்தவரை. ஜேஎன்யூ என்றால் காரசார விவாதம் மட்டும் தான். அங்கு எப்போதுமே கலவரம் நடந்தது இல்லை. ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை. இந்த கலவரத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மத்திய அரசு உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என்ன நடக்கிறதோ தெரியாது, நாடு முழுக்க அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் டிவிட் செய்துள்ளார்.

நீங்கள் தான் பாதுகாப்பு அமைச்சர். இப்படி ட்விட்டரில் நீலி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல், நேரடியாக பல்கலைக்கழகத்திற்குள் சென்று மாணவர்களிடம் இது குறித்து பேசுங்கள் என்று நிர்மலா சீதாராமனின் ட்விட்டருக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள் .

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close