குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் ரூ. 15,000 திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 09:39 pm
amma-vadi-scheme-introduced-by-jaganmohan-reddy

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழைத்தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் நேற்று  தொடங்கி வைத்தாா்.

குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுகிறது. எனவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாயாருக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தாய்மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

                                                     

 இதன் மூலம் 42 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 82 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைய உள்ளனா். இதற்காக அரசு ரூ. 6,456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close