இனி ரயில்களில் படங்கள் திரையிடப்படும் ;பயணிகள் வரவேற்பு!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 03:03 pm
movies-in-train

2022-ம் ஆண்டு முதல் ரெயில்களில் திரைப்படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ரெயில் பயணிகளை கவரும் புதிய முயற்சியாக, இந்த சேவையை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த பொறுப்பை ஏற்றுள்ள ரயில் டெல் நிறுவனம்  சேவையை வழங்க ஜீ என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மார்கோ நெட்வொர்க் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.

                                     

பிரிமியம் ரயில்கள், விரைவு ரயில்கள், மெயில்களில் மட்டுமன்றி புறநகர் ரயில்களிலும் 2022-ம் ஆண்டு முதல் சினிமா, பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இலவசமாகவும் கட்டண அடிப்படையிலும் ஒளிபரப்பப்படவுள்ளன. வைபை வசதி கொண்ட ரெயில் நிலையங்களிலும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close