பள்ளிவாசலில் நடந்த இந்து முறைப்படி திருமணம்

  சாரா   | Last Modified : 20 Jan, 2020 04:59 am
hindu-marriage-in-muslim-mosque

இஸ்லாமிய பள்ளிவாசலில் இந்து மத ஜோடிக்கு இந்துமத முறைப்படி திருமணம் நடைபெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை நடந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஜமாத்துக்கு கடந்த நவம்பரில் ஒரு இந்துப் பெண்ணிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.அதில், கணவரை இழந்த பிந்து என்ற பெண் ஒருவர், தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க உதவி தேவைப்படுவதாகவும், அதற்கு ஜமாத் கமிட்டி உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதனையடுத்து, பிந்துவின் மகள் அஞ்சுவுக்கு மசூதியிலேயே திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டு, 
மணமகளுக்கு 10 பவுன் நகையும் 2 லட்சம் ரூபாயும் கொடுத்ததோடு, திருமண செலவையும் ஏற்றது. பள்ளிவாசலில் நடைபெற்றாலும், சேரப்பள்ளி ஜும்மா மசூதி மண்டபத்திலேயே இந்து முறைப்படியே இந்தத் திருமணம் இன்று விமர்சையாக நடைபெற்றுள்ளது.

                                                         

                                                         

 

                                                            

 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இஸ்லாமியரப் பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close