அமித்ஷா இடத்தில் ஜே.பி. நட்டா !! பா.ஜ.கவின் புதிய தேசியத் தலைவரானார்

  சாரா   | Last Modified : 20 Jan, 2020 03:03 pm
jp-nadda-set-to-take-over-from-amit-shah-as-new-bjp-president

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா தேசியத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவரான அமித்ஷா, உள்துறை அமைச்சரானார். இதனால் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.பாஜகவின் தலைவர் பதவிக்கானத் தேர்தல் நடைமுறைகளை அக்கட்சி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஜே.பி. நட்டா இன்று பாஜக தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தவுடன், ஜே.பி. நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close